பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 5 July 2019 3:45 AM IST (Updated: 5 July 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர்,

எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவை தொடர்ந்து புதுப்பித்து 30.6.2019 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1-ந் தேதியுடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருந்தால் போதுமானது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு ஏதும் கிடையாது. ஏனையோருக்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவித் தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.6.2019 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், மற்றவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

இலவசமாக விண்ணப்பங்கள்

உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலை வாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே, விண்ணப்பித்து 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 30-ந் தேதிக்குள் அலுவலக வேலை நாட்களில் பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப் பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Next Story