மாவட்ட செய்திகள்

கறம்பக்குடி அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு + "||" + College students seeking extra bus facility near Karambakkudi

கறம்பக்குடி அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு

கறம்பக்குடி அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
கறம்பக்குடி அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதி நால்ரோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, ரெகுநாதபுரம், ஊரணிபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இந்த வழித்தடத்தில் போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை.


இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் ஒரே அரசு பஸ்சில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்று வருகின்றனர். ஆபத்தான இந்த பயணத்தால் விபத்துகள் ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

மேலும் இயக்கப்படும் ஒரு சில பஸ்களும் சரிவர இயக்கப்படுவதில்லை. இதனால் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டு வருகிறது. நேற்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு அரசு பஸ்சில் மாணவர்களை ஏற்றிச்செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மருதன்கோன்விடுதி நால் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி, ஊரணிபுரம், கந்தர்வகோட்டை பகுதியிலிருந்து அரசு கல்லூரிக்கு டவுன் பஸ் இயக்க வேண்டும். மேலும் அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் வசதி வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் மருதன்கோன்விடுதி நால்ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. கோனேரிப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
கோனேரிப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் பெரம்பலூர் புறவழிச்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2. குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
கோனேரிப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் பெரம்பலூர் புறவழிச்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. ஜெட்லி மரணத்தால் பாதிப்பில்லை: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடரும் - மத்திய அரசு தகவல்
ஜெட்லி மரணத்தால் பாதிப்பில்லை என்றும், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடரும் என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
4. ஆஷஸ் 2-வது டெஸ்ட் மழையால் பாதிப்பு
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் 2-வது டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்டது.
5. திருப்பத்தூரில் தார்சாலை அமைக்கக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
திருப்பத்தூரில் தார்சாலை அமைக்கக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. நல்லதம்பி தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.