வெள்ளியணை அருகே வெறிநாய்கள் கடித்து 30 செம்மறி ஆடுகள் செத்தன
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள வால்காட்டுபுதூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
வெள்ளியணை,
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள வால்காட்டுபுதூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை செம்மறி ஆடுகளை மேய்த்துவிட்டு, பின்னர் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சாப்பிட வந்தார். பின்னர் இரவு தோட்டத்திற்கு சென்று செம்மறி ஆடுகளை பார்த்தார். அப்போது, பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 20 செம்மறி ஆடுகள் வெறிநாய்கள் கடித்ததில் செத்து கிடந்தன. மேலும் 15 செம்மறி ஆடுகள் காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன. இதேபோல் பத்தாம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமிக்கு சொந்தமான 10 செம்மறி ஆடுகளும் வெறிநாய்கள் கடித்ததில் இறந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த செம்மறி ஆடுகளை பார்வையிட்டனர். பின்னர் இறந்த ஆடுகள் அப்பகுதியில் புதைக்கப்பட்டன. காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Tags :
Next Story