குடிநீர் கேட்டு ஒன்றிய ஆணையரிடம் பொதுமக்கள் மனு
தோகைமலை அருகே உள்ள பழையகல்லுப்பட்டி மற்றும் புதுகல்லுப்பட்டி பகுதி பொதுமக்கள் நேற்று ஒன்றிய ஆணையர் (கிராமவளர்ச்சி) ராஜேந்திரனிடம் மனு ஒன்று கொடுத்தனர்.
தோகைமலை,
தோகைமலை அருகே உள்ள பழையகல்லுப்பட்டி மற்றும் புதுகல்லுப்பட்டி பகுதி பொதுமக்கள் நேற்று ஒன்றிய ஆணையர் (கிராமவளர்ச்சி) ராஜேந்திரனிடம் மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில், தோகைமலை ஊராட்சிக்கு உட்பட்ட பழையகல்லுப்பட்டி மற்றும் புதுகல்லுப்பட்டி பகுதிகளில் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களது பகுதிக்கு வரும் காவிரி குடிநீர் குழாயில் உள்ள வாழ்வினை அடிக்கடி யாரோ அடைத்து விடுவதால் எங்கள் பகுதிக்கு குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அதில் கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட ஒன்றிய ஆணையர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Tags :
Next Story