தனியார் தொண்டு நிறுவன வங்கி கணக்கில் இருந்து சுருட்டிய ரூ.1.90 கோடி பறிமுதல் - தாவணகெரேயை சேர்ந்த 3 பேர் கைது
போலி காசோலை, ஆவணங்கள் தயாரித்து தனியார் தொண்டு நிறுவன வங்கி கணக்கில் இருந்து சுருட்டிய ரூ.1.90 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தாவணகெரேயை சேர்ந்த 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா டவுனில் உள்ள ஒரு வங்கியில் பணம் டெபாசிட் செய்ய 3 பேர் வந்தனர். அந்த நபர்கள் தங்களது பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் ரூ.1 கோடியே 90 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அந்த நபர்களிடம் கட்டுக்கட்டாக பணம் இருப்பது அறிந்த வங்கி மேலாளர், நெலமங்களா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் தாவணகெரே மாவட்டம் ஹரிகராவை சேர்ந்த பரிசித் நாயக், குரு மற்றும் ராமசாமி என்று தெரிந்தது. பணம் குறித்து 3 பேரிடமும் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார்கள். அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. பின்னர் 3 பேரிடமும் துருவி, துருவி விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
அதாவது பெலகாவி மாவட்டம் பைலஒங்கலாவில் தனியாருக்கு சொந்தமான தனியார் தொண்டு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகள் பெங்களூரு உள்பட பல பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. அந்த தொண்டு நிறுவனத்தின் பெயரில் போலி காசோலைகளை 3 பேரும் தயாரித்துள்ளனர். மேலும் தொண்டு நிறுவனம் கணக்கு வைத்துள்ள வங்கியில் கொடுக்கப்பட்டு இருந்த செல்போன் நம்பரையும் 3 பேரும் ரகசியமாக தெரிந்து கொண்டுள்ளனர்.
அதன்பிறகு, அந்த செல்போன் எண்ணை முடக்கியதுடன், அந்த நிறுவனம் கணக்கு வைத்துள்ள பெங்களூரு ராமமூர்த்திநகரில் உள்ள வங்கியில் போலி காசோலைகள், ஆவணங்களை கொடுத்து ரூ.3 கோடி வரை எடுத்துள்ளனர். அந்த பணத்தில் ரூ.19 லட்சத்திற்கு புதிய காரை வாங்கியுள்ளனர். மேலும் தங்களை பிரபல தொழில்அதிபர்கள் எனக்கூறிக் கொண்டு அந்த காரில் வலம் வந்துள்ளனர்.
அதே நேரத்தில் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் நெலமங்களாவில் உள்ள வங்கியில் தங்களது பெயர்களில் புதிய கணக்குகளை 3 பேரும் தொடங்கியுள்ளனர். தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து சுருட்டியதில் ரூ.1.90 கோடியை தங்களது பெயரிலான கணக்குகளில் டெபாசிட் செய்ய வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பரிசித் நாயக், குரு, ராமசாமி ஆகியோரை நெலமங்களா போலீசார் கைது செய்தார்கள்.
அவர்களிடம் இருந்து ரூ.1.90 கோடி, ஒரு கார், போலி ஆவணங்கள், காசோலைகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3 கோடி வரை சுருட்டியதாக, ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே வழக்குப்பதிவாக இருந்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் ராமமூர்த்திநகர் போலீசாரிடம் நெலமங்களா போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story