குளித்தலையில், சாலையின் நடுவே பஸ்களை நிறுத்தி டிரைவர்கள் வாக்குவாதம் - போக்குவரத்து பாதிப்பு


குளித்தலையில், சாலையின் நடுவே பஸ்களை நிறுத்தி டிரைவர்கள் வாக்குவாதம் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 July 2019 4:00 AM IST (Updated: 6 July 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் சாலையின் நடுவே பஸ்களை நிறுத்தி டிரைவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ் டிரைவர் தான் புறப்படும் நேரத்திற்கு முன்பாக பஸ்சை இயக்கி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த தனியார் பஸ் டிரைவர் ஒருவர் தான் ஓட்டிச்செல்லும் பஸ்சை அதிவேகமாக இயக்கி தனக்கு முன்னால் புறப்பட இருந்த அரசு பஸ்சை முந்திச்சென்று சாலையின் நடுவே நிறுத்தினார். இதன்பிறகு அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் சாலையின் நடுவே நின்று கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் குளித்தலை பஸ்நிலையம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

அங்கு பணியில் இருந்த குளித்தலை போலீசார் போக்குவரத்தை சீரமைத்து பிரச்சினையில் ஈடுபட்ட அரசு மற்றும் தனியார் பஸ்சின் டிரைவர்களை குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் பஸ் டிரைவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே பஸ்களை இயக்க வேண்டும். இதற்கு மாறாக பஸ்கள் இயக்கப்பட்டு பிரச்சினைகள் ஏற்பட்டால் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். இதன்பிறகும் இதுதொடர்பாக பிரச்சினைகள் ஏற்பட்டால் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவேண்டுமென எச்சரித்தும், சமாதானம் செய்தும் இருதரப்பினரையும் அனுப்பி வைத்தனர். மேலும் அதிவேகமாக பஸ் இயக்கியதற்காகவும், சீருடை அணியாமல் பஸ்சை ஓட்டியதற்காகவும் தனியார் பஸ் டிரைவருக்கு ரூ.1,100 அபராதம் விதிக்கப்பட்டது.
1 More update

Next Story