செஞ்சி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


செஞ்சி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 July 2019 4:30 AM IST (Updated: 6 July 2019 10:38 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செஞ்சி, 

செஞ்சி ஒன்றியத்தில் உள்ளது ஆலம்பூண்டி கிராமம். இங்கு வசித்து வரும் மக்களுக்கு 3 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக, ஒரு நீர்தேக்க தொட்டியில் இருந்து மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அனைவருக்கும் முழுமையாக குடிநீர் கிடைக்கவில்லை. இதன் காரணமாக கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதை கண்டித்து ஆலம்பூண்டியில் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் கிராம மக்கள் சாலை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் கிராம மக்கள் மறியலை கைவிட மறுத்துவிட்டனர்.

இதை தொடர்ந்து செஞ்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் நேரில் வந்து சமாதானம் பேசினார். அப்போது கிராமத்தில் உரிய அனுமதி பெறாமல் பெறப்பட்டுள்ள முறையற்ற குடிநீர் இணைப்புகளை துண்டித்து அனைவருக்கும் குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story