கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை பெற நடவடிக்கை அமைச்சர் காமராஜ் பேட்டி


கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை பெற நடவடிக்கை அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 7 July 2019 4:45 AM IST (Updated: 6 July 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.

நன்னிலம்,

மத்திய அரசின் பட்ஜெட் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த பட்ஜெட் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியதையே நானும் கூறுகிறேன். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என பட்ஜெட்டில் மத்திய அரசு கூறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தவில்லை. இந்த நிலையில் காவிரி தண்ணீரை பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. அதே நேரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு ஏற்று விரைவில் தண்ணீர் திறப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு என்பது இப்போது மட்டுமல்ல தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்திலும் இருந்துள்ளது. விலைவாசி உயர்வு பிரச்சினை விரைவில் சரியாகிவிடும். திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்டது. மீண்டும் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story