தமிழக விளையாட்டு விடுதிகளில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
தமிழக விளையாட்டு விடுதிகளில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை(திங்கட்கிழமை) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகளில் 2019-20-ம் ஆண்டுக்கான 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் விடுதியில் சேர விண்ணப்பத்துடன் 2 சுய முகவரியிட்ட அஞ்சல் அட்டையை இணைத்து வழங்க வேண்டும். 7-ம் வகுப்பு மாணவர்கள் 165 செ.மீ. உயரம், 8-ம் வகுப்பு மாணவர்கள் 170 செ.மீ. உயரம், 9-ம் வகுப்பு மாணவர்கள் 175 செ.மீ. உயரம், 11-ம் வகுப்பு மாணவர்கள் 185 செ.மீ. உயரம் மற்றும் 7-ம் வகுப்பு மாணவிகள் 155 செ.மீ. உயரம், 8-ம் வகுப்பு மாணவிகள் 160 செ.மீ. உயரம், 9-ம் வகுப்பு மாணவிகள் 165 செ.மீ. உயரம், 11-ம் வகுப்பு மாணவிகள் 175 செ.மீ. உயரம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
7-ம் வகுப்பு சேர்க்கைக்கு 1.1.2006, 8-ம் வகுப்பு சேர்க்கைக்கு 1.1.2005, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கு 1.1.2003 மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு 1.1.2001-க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். உணவு, தங்குமிடம், விளையாட்டு சீருடை, விளையாட்டு பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்படும். உணவிற்காக நாள் ஒன்றிற்கு ரூ.250 அரசு ஒதுக்கீடு செய்கிறது. கல்வி சம்பந்தப்பட்ட கட்டணங்களை பெற்றோர் ஏற்க வேண்டும்.
கடைசி நாள்
எந்த காரணத்தாலும் இடையில் வெளியேறினால் நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் கணக்கிட்டு, தொகையை திரும்ப செலுத்த வேண்டும். நீலகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை அணுகி ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். அல்லது www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் நிரப்பலாம்.
விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டிய கடைசி நாள் நாளை(திங்கட்கிழமை) மாலை 5 மணி. விண்ணப்பதாரர்களுக்கான மாநில 2-ம் கட்ட தேர்வில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் தடகளம், கால்பந்து, உள் விளையாட்டு அரங்கில் இறகுப்பந்து, டேக்வாண்டோ, கைப்பந்து, ஸ்குவாஷ் மற்றும் அசோக் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story