மாவட்ட செய்திகள்

சிங்கபெருமாள் கோவிலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை; சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார் + "||" + Youth suicides at Singaberumal temple; The father complains that the death is suspicious

சிங்கபெருமாள் கோவிலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை; சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்

சிங்கபெருமாள் கோவிலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை; சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
சிங்கபெருமாள் கோவிலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

வண்டலூர்,

திருவாரூர் மாவட்டம் புதுப்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் பாலகுமாரன் (வயது 19), இவர் சிங்கபெருமாள் கோவிலில் தனது நண்பர்களுடன் அறையில் தங்கி ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை முடித்து அறைக்கு வந்த அவரது நண்பர்கள் பாலகுமாரன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாலகுமாரனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக பாலகுமாரனின் தந்தை ராமச்சந்திரன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுமாரன் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து அறையில் அவருடன் தங்கி இருந்த நண்பர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினி மீது போலீசில் புகார்
பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினி மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
2. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3. மாட்டுப்பொங்கலையொட்டி திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி
மாட்டுப் பொங்கலையொட்டி திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் நேற்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
4. இயக்குனர் மீது நடிகை ‘மீ டூ’ புகார்
இயக்குனர் மீது நடிகை ரூபஞ்சனா மித்ரா ‘மீ டூ’ புகார் தெரிவித்துள்ளார்.
5. குலுக்கல் முறையில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக புகார்; பெண் வேட்பாளர் சாபமிட்டதால் பரபரப்பு
திருப்பரங்குன்றத்தில் குலுக்கல் முறையில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக புகார் கூறி பெண் வேட்பாளர் சாபமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.