கூடலூர் பகுதியில், பருவமழை பொய்த்ததால் நிலக்கடலை சாகுபடி பாதிப்பு - விவசாயிகள் கவலை


கூடலூர் பகுதியில், பருவமழை பொய்த்ததால் நிலக்கடலை சாகுபடி பாதிப்பு - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 8 July 2019 4:30 AM IST (Updated: 7 July 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் பருவமழை பொய்த்ததால் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டிய கழுதைமேடுபுலம், பெருமாள்கோவில் மலைப்பகுதி, ஏகலூத்து, புதுரோடு தொட்டினார்புலம் ஆகிய பகுதிகளில் மானாவாரி நிலங்கள் அதிகளவில் உள்ளன.

இந்த பகுதிகளில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து உள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தப் பகுதியில் நிலக்கடடை சாகுபடி செலவு அதிகரித்த நிலையில் போதிய மகசூல் மற்றும் விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக இந்த ஆண்டு இப்பகுதியில் நிலக்கடலை சாகுபடி பரப்பு நான்கில் ஒரு பங்காக குறைந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போனதால் கூடலூர் தொட்டினார் புலம் உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

போதிய தண்ணீர் கிடைக்காததால் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை பயிர்கள் வெயிலில் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நிலக்கடலை பயிர்களை காப்பாற்ற வருண பகவான் கருணையால் மழை பெய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Next Story