பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 3 புதிய பஸ்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 4-ந்தேதி, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் 500 பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கரூர்,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 4-ந்தேதி, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் 500 பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து கரூர் மாவட்ட பஸ் நிலையத்தில், 3 புதிய பஸ்களை மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்சி முதல் ஈரோடு வரையிலும், திருச்சி முதல் திருப்பூர் வரையிலும், முசிறி முதல் மணப்பாறை வழியாக மதுரை வரையிலுமான வழித்தடங்களுக்கு அந்த 3 புதிய பஸ்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து கரூர் மாவட்ட போக்குவரத்துத்துறையில் நடத்துனராக இருந்து பரிசோதகராக பதவி உயர்வுபெற்ற 11 பேருக்கும், பணி உயர்விற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கீதா எம்.எல்.ஏ., கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, கரூர் மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் குணசேகரன், துணை மேலாளர் முத்து, மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.திருவிகா, மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கே.கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story