மோட்டார் சைக்கிளில் சென்றபோது, கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிளில் சென்றபோது, கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 July 2019 4:00 AM IST (Updated: 8 July 2019 4:58 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

கிணத்துக்கடவு, 

கோவை மாவட்டம் போத்தனூர் சாரதா மில் ரோடு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 49). இவர் பேரூர் உட்கோட்ட தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜேந்திரன் நேற்று முன்தினம் சுந்தராபுரம் சாந்தா மில் ரோட்டில் வசித்து வரும் தனது தங்கை புஷ்பலட்சுமியுடன் (48) மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார்.பின்னர் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கோவை-பொள்ளாச்சி ரோடு தாமரைக்குளம் அருகே இரவு நேரத்தில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், புஷ்பலட்சுமி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில், கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின் றனர். மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story