அந்தேரியில், ரூ.5½ லட்சம் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது - போலீசார் விசாரணை

அந்தேரியில் ரூ.5½ லட்சம் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை அந்தேரி லோகன்ட்வாலா பகுதியில் பெண் ஒருவர் போதைப்பொருளுடன் வருவதாக ஒசிவாரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு பெண்ணை பிடித்து பெண் போலீசார் உதவியுடன் சோதனை போட்டனர். இந்த சோதனையில் அவர் கோகைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
அந்த போதைப்பொருள் 71 கிராம் எடை கொண்டதாக இருந்தது. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 68 ஆயிரம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில், அவரது பெயர் ஏதேன் ரேலே என்பதும், பேஷன் டிசைனர் என்பதும் தெரியவந்தது. வெளிநாட்டை சேர்ந்த அவர் கடந்த ஆண்டு தொழில் விசாவில் இந்தியா வந்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அவர் போதைப்பொருளை ஒரு கிராமுக்கு ரூ.8 ஆயிரத்துக்கு விற்று வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இது குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story