சாப்பாடு சரியில்லை என்றதால் ஆத்திரம் கூலித்தொழிலாளி உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு
பெரியபாளையத்தில் விருந்துக்கு சென்ற இடத்தில் சாப்பாடு சரியில்லை என்று கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கூலித்தொழிலாளி உள்பட 2 பேரை வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 33). கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி முனீஸ்வரி (வயது 30) என்பவருடன் பெரியபாளையம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், பெரியபாளையம் அண்ணா நகரில் உள்ள தனது அத்தை மகள் பரமேஸ்வரி வீட்டிற்குச் சென்றார். உறவினர்கள் வந்ததால் பரமேஸ்வரி தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இந்நிலையில், பரமேஸ்வரியின் கணவர் கன்னியப்பன் (39) மற்றும் குமார் ஆகிய இருவரும் மது அருந்தியதாக தெரிகிறது. மது போதையில் கன்னியப்பன், பரமேஸ்வரி மற்றும் குமார் அவரது மனைவி முனீஸ்வரி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது குமார் உணவு சரியில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் குமாருக்கும், கன்னியப்பனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த கன்னியப்பன், குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரி கணவரை தடுக்க முயன்றார். இதனால் பரமேஸ்வரிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த முனீஸ்வரி பயத்தில் கூக்குரலிட்டார்.
இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் பயந்து போன கன்னியப்பன் அரிவாளுடன் தப்பிச் சென்று விட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த குமார் மற்றும் பரமேஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரியபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story