விடுபட்டவர்களுக்கு புயல் நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுபட்டவர்களுக்கு புயல் நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 July 2019 4:30 AM IST (Updated: 10 July 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

விடுபட்டவர்களுக்கு புயல் நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருத்துறைப்பூண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கியது. இதில் விடுபட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. நகராட்சி அதிகாரிகள் விடுபட்டவர்களை கணக்கெடுப்பு செய்து பெயர் பட்டியலை வெளியிட்ட பின்னரும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்காத நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும், விடுபட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரராமன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் முன்னாள் நகர செயலாளர் முத்துக்குமரன், விவசாய சங்க நகர செயலாளர் சுந்தர், விவசாய தொழிலாளர் சங்க நகர தலைவர் பக்கிரிசாமி, நகர செயலாளர் வாசுதேவன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் காந்தி, நிஜாம், தாஜீதீன், மாதர் சங்க நகர செயலாளர் வீரரஷ்யா, இளைஞர் பெருமன்ற நகர செயலாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story