ரூ.53 லட்சம் மதிப்பில் கணினிமயமாக்கப்பட்ட மின்தடை புகார் பதிவு மைய கட்டிடம் அமைச்சர் திறந்து வைத்தார்


ரூ.53 லட்சம் மதிப்பில் கணினிமயமாக்கப்பட்ட மின்தடை புகார் பதிவு மைய கட்டிடம் அமைச்சர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 9 July 2019 10:45 PM GMT (Updated: 9 July 2019 6:42 PM GMT)

திருவாரூரில், ரூ.53 லட்சம் மதிப்பில் கணினிமயமாக்கப்பட்ட மின்தடை புகார் பதிவு மைய கட்டிடத்தை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அலுவலக வளாகத்தில் ரூ.53 லட்சம் மதிப்பில் கணினிமயமாக்கப்பட்ட மின்தடை புகார் பதிவு மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். ஆடலரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்

மின் நுகர்வோர்களின் மின் தொடர்பான குறைகளை உடனுக்குடன் சரி செய்ய 24 மணி நேரமும் இயங்கும் கணினி மயமாக்கப்பட்ட மின்தடை புகார் பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட நுகர்வோர்கள் தங்களுடைய மின்தடை குறித்த புகார்களை 1912 மற்றும் 04366-259100 என்ற தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களது மின்தடை குறித்த குறைகளை பதிவு செய்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். இந்த வசதியினால் திருவாரூர் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள 4 லட்சத்து 62 ஆயிரத்து 982 மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், திருவாரூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணவேணி, செயற்பாறியாளர்கள் காளிதாஸ், ராதிகா, மதிவாணன், கூட்டுறவு சங்க தலைவர்கள் மணிகண்டன், கலியபெருமாள், முன்னாள் தலைவர்கள் மூர்த்தி, பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story