மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணியில் எலி மருந்தை தின்று பெண் தற்கொலை போலீசார் விசாரணை + "||" + Police investigate suicide of female rat in Velankanni

வேளாங்கண்ணியில் எலி மருந்தை தின்று பெண் தற்கொலை போலீசார் விசாரணை

வேளாங்கண்ணியில் எலி மருந்தை தின்று பெண் தற்கொலை போலீசார் விசாரணை
வேளாங்கண்ணியில் சிதம்பரத்தை சேர்ந்த பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வாசீசநகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி இந்திரா (வயது 40). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த இந்திரா கடந்த 7-ந் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு வந்துள்ளார். அப்போது இந்திரா, எலி மருந்தை (விஷம்) தின்று விட்டு தனது ஊருக்கு திரும்பி சென்றுள்ளார். அவர் வீட்டிற்கும் சென்றதும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இந்திரா பரிதாபமாக இறந்தார்.


போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. குடியரசு தினத்தை முன்னிட்டு திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
குடியரசு தினத்தையொட்டி திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடு்பட்டு வருகின்றனர்.
2. காரிமங்கலம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
காரிமங்கலம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. குடியரசு தின விழாவை சீர்குலைக்க திட்டமா? சப்-இன்ஸ்பெக்டரை கொன்ற பயங்கரவாதிகளிடம் போலீஸ் துருவி துருவி விசாரணை
குடியரசு தின விழாவை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளனரா? என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டரை கொன்ற பயங்கரவாதிகளிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
4. குடியரசு தினவிழாவையொட்டி சோதனைச்சாவடியில் துப்பாக்கியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு
குடியரசு தினவிழாவையொட்டி சிறுபாக்கம் சோதனைச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
5. திருப்பரங்குன்றத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி? போலீஸ் விசாரணை
திருப்பரங்குன்றம் தண்டவாளத்தில் கட்டையைப் போட்டு எக்ஸ்பிரஸ், ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.