திண்டிவனம் அருகே, செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை


திண்டிவனம் அருகே, செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 10 July 2019 4:15 AM IST (Updated: 10 July 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே தனியார் மருத்துவமனை செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோ‌‌ஷ்குமார், விவசாயி. இவரது மகள் உமாபாரதி (வயது 20). இவர் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்த உமாபாரதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து திடீரென வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதைபார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே உமாபாரதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சந்தோ‌‌ஷ்குமார் ரோ‌‌ஷணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாபாரதி காதல் பிரச்சினையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story