மாவட்ட செய்திகள்

சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவு + "||" + Little fishermen Collector Prashant Vadanere orders to go to sea

சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவு

சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவு
சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவில்,

நெல்லை மாவட்டம் கூத்தங்குழி கிராமத்தை சேர்ந்த நாட்டு படகு மீனவர்களுக்கும், குமரி மாவட்ட சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் நாட்டு படகில் இருந்த மீனவர் டிலைட்(வயது 50) என்பவர் கடலில் விழுந்து பலியானார்.


இதுதொடர்பாக மீனவர்கள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க, சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

கலெக்டர் உத்தரவு

இந்த நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமையில் சின்னமுட்டம் மீனவ பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான விசைப்படகு மீனவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் தளவாய்சுந்தரம் மற்றும் சின்னமுட்டம் மீனவர்கள் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்தனர்.

மீனவர் பிரச்சினை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கையை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிகர லாபத்தை உயர்த்திட வேளாண்மை எந்திரமயமாக்கும் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் கலெக்டர் தகவல்
நிகர லாபத்தை உயர்த்திட வேளாண்மையை எந்திரமயமாக்கும் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
2. மருத்துவ கழிவுகளை கையாளும் அனைத்து நிறுவனங்களும் அங்கீகாரம் பெற வேண்டும் கலெக்டர்கள் உத்தரவு
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் மருத்துவ கழிவுகளை கையாளும் அனைத்து மருத்துவ நிறுவனங்களும் அங்கீகாரம் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
3. நகர பகுதியில் கவர்னர் ஆய்வு: தேங்கி கிடக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
புதுவை நகர பகுதியில் கவர்னர் கிரண்பெடி நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது தாழ்வான பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
4. மருத்துவ கழிவுகளை கையாளும் அனைத்து நிறுவனங்களும் அங்கீகாரம் பெற வேண்டும் கலெக்டர்கள் உத்தரவு
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் மருத்துவ கழிவுகளை கையாளும் அனைத்து மருத்துவ நிறுவனங்களும் அங்கீகாரம் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
5. தீவன சோளம்-தட்டைப்பயிறு உற்பத்தி செய்ய 100 சதவீத மானியத்தில் விதைகள் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
தீவன சோளம் மற்றும் தட்டைப்பயிறு உற்பத்தி செய்ய 100 சதவீத மானியத்தில் விதைகள் வழங்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.