கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் நீர்மேலாண்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி


கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் நீர்மேலாண்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 10 July 2019 11:15 PM GMT (Updated: 10 July 2019 5:16 PM GMT)

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் நீர்மேலாண்மை குறித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மத்திய அரசு கூடுதல் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் (ஜல் சக்தி அபியான்) நீர் மேலாண்மை குறித்த உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய அரசு நுகர்வோர் மற்றும் பொது வினியோகத்துறை கூடுதல் செயலர் மஜ்ஹீ தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரபாகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மனித வள மேம்பாட்டு கழக இயக்குனர் விஜயபாஸ்கர் குராலா, விஞ்ஞானிகள் ஸ்ரீனிவஸ்தவா, ஆதிரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கீதா, தமிழ்த்துறை உதவி பேராசிரியை சிவகாமி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் செயலர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம பகுதி மற்றும் நகர் பகுதிகளில் நீர் மேலாண்மையை விரிவுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் கூட்டு முயற்சியோடு மழை நீர் சேகரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அதே போல் நாம் ஒவ்வொருவரும் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மாணவிகள் தங்கள் வீடுகளில் கட்டாயம் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து கலெக்டர் பேசியதாவது:- நீர்மேலாண்மை குறித்து தங்கள் வீடுகளில் சொந்த முயற்சியில் புதுமையான முறையில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் மாணவிகளுக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து, கூடுதல் செயலர் தலைமையிலான குழுவினர், தேவசமுத்திரம் ஏரி தூர் வாரும்பணிகளையும், நகராட்சி பகுதிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் ஆழ்துளை கிணற்றை சுற்றி புதிதாக மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரசன்னவெங்கடேசன், மக்கள் செய்தி தொடர்பாளர் சேகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story