போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை தடுக்க முடியும் போலீஸ் துணை சூப்பிரண்டு பேச்சு


போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை தடுக்க முடியும் போலீஸ் துணை சூப்பிரண்டு பேச்சு
x
தினத்தந்தி 12 July 2019 4:15 AM IST (Updated: 12 July 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை தடுக்க முடியும் என போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் கூறினார்.

திருவாரூர்,

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அவசியம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின்படி தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தலைக் கவசம் அணிந்து செல்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் பொதுமக்களுக்கு வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விபத்துகளை தடுக்க முடியும்

மோட்டார் சைக்கிளில் ஏற்படும் விபத்துகளில் அதிகமாக தலையில் அடிப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகின்றது. தலைக்கவசம் அணிந்து சென்றால் நிச்சயம் உயிரிழப்பை தடுக்க முடியும். எனவே அனைவரும் தலைக்கவசம் அவசியம் அணிந்து செல்ல வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும். வாகனத்தை ஓட்டும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் போக்குவரத்து விதி முறைகளை கடைபிடித்தால் விபத்துகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் திருவாரூர் தாலுகா இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சத்யா ஆகியோர் உடனிருந்தார். அப்போது பொதுமக்களுக்கு தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

Next Story