அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி கொலை 2 பேரிடம் போலீசார் விசாரணை


அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி கொலை 2 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 July 2019 3:30 AM IST (Updated: 14 July 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

கேளம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்,

கேளம்பாக்கம் அரசுஆஸ்பத்திரி வளாகத்திற்குள் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் மார்க்கெட் பகுதியை சேர்ந்த அருள் (வயது 45) என்பதும், மூட்டை தூக்கும் தொழிலாளியான அவருக்கு திருமணமாகவில்லை என்பதும் தெரியவந்தது.

போலீசார் அருளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அருளுடன் வேலை செய்யும் தொழிலாளர்கள் 2 பேரை கேளம்பாக்கம் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story