மாவட்ட செய்திகள்

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு நல உதவிகள் வழங்கினார் + "||" + In the Kolathurur constituency Study by MK Stalin Provided welfare assistance

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு நல உதவிகள் வழங்கினார்

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு நல உதவிகள் வழங்கினார்
தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது தொகுதியான கொளத்தூரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை,

 64-வது வார்டில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், அப்பள்ளிக்கு 2 கணினிகளையும், ஒரு தொலைக்காட்சிப் பெட்டியையும் வழங்கியதோடு, 1,839 மாணவ, மாணவியருக்கு நோட்டுப்புத்தகம், எழுது பொருட்களை வழங்கினார்.


மேலும், 20 பெண்களுக்கு தையல் எந்திரமும், 21 பேர்களுக்கு மருத்துவ உதவியும், 10 ஏழைகளுக்கு நான்கு சக்கர தள்ளு வண்டிகளையும், 10 பேருக்கு மீன்பாடி வண்டிகளையும், ஒருவருக்கு மோட்டார் பொருத்திய 3 சக்கர வாகனமும், ஒருவருக்கு மாவு அரைக்கும் எந்திரமும், 3 பேர்களுக்கு இஸ்திரி பெட்டிகளும், ஒருவருக்கு காது கேட்கும் கருவியையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வீ.கலாநிதி வீராசாமி எம்.பி., சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. உள்பட கலந்து கொண்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...