வங்கி கிளார்க் பணிக்கான எழுத்து தேர்வு: திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் 17-ந்தேதி தொடங்குகிறது


வங்கி கிளார்க் பணிக்கான எழுத்து தேர்வு: திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் 17-ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 13 July 2019 9:45 PM GMT (Updated: 13 July 2019 7:31 PM GMT)

ஐ.பீ.பி.எஸ். நடத்தும் வங்கி கிளார்க் பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வருகிற 17-ந்தேதி பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.

திருச்செந்தூர், 

ஐ.பீ.பி.எஸ். நடத்தும் வங்கி கிளார்க் பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வருகிற 17-ந்தேதி பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.

எழுத்து தேர்வு

இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பீ.பி.எஸ்.) நடத்தும் பொதுத்துறை வங்கி மற்றும் கிராமிய வங்கி கிளார்க் பதவிக்கான எழுத்துத்தேர்வுக்கு திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகள் நடத்துகிறது.

கிராமிய வங்கிகளின் கிளார்க் பதவிக்கான எழுத்து தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வு பற்றிய விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் கடந்த 4-ந்தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

பட்டப்படிப்பில் தேர்ச்சி

பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 28 வயது மிகாதவர்கள் இத்தேர்வை எழுதலாம். இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் ரூ.4 ஆயிரம் ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும் போது எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல, விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல் நாள் 17-ந்தேதி நேரில் செலுத்த வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர...

பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள், திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் உள்ள சிவந்தி அகாடமியில் 17-ந்தேதி காலை 9 மணிக்கு பயிற்சி கட்டணம் ரூ.4 ஆயிரம் நேரில் செலுத்த வேண்டும். பயிற்சிக்கான கட்டணம், விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது.

மேலும் தகவலுக்கு 04639-242998, 9442055243, 8682985148 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story