மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் கடத்தப்பட்ட சிறுமி 7 மாதங்களுக்கு பிறகு மீட்பு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது + "||" + The kidnapped girl in Erode Recovery after 7 months; Pokco frame The plaintiff was arrested

ஈரோட்டில் கடத்தப்பட்ட சிறுமி 7 மாதங்களுக்கு பிறகு மீட்பு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

ஈரோட்டில் கடத்தப்பட்ட சிறுமி 7 மாதங்களுக்கு பிறகு மீட்பு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஈரோட்டில் கடத்தப்பட்ட சிறுமி 7 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டார். அவரை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,

ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமானார். அந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், தங்களது மகளை வாலிபர் ஒருவர் கடத்தி சென்றுவிட்டதாகவும், கண்டுபிடித்து தரும்படியும் கூறிஇருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.


விசாரணையில், ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் குமாரபாளையத்தை சேர்ந்த கணேஷ் என்பவருடைய மகன் வேல்முருகன் (வயது 21), சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த வேல்முருகனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் வேல்முருகன் அந்த சிறுமியுடன் லக்காபுரம் பஸ் நிலையத்தில் நிற்பதாக ஈரோடு மகளிர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று வெளியூருக்கு தப்பி செல்ல தயாராக இருந்த வேல்முருகனை கைது செய்தனர். மேலும், அந்த சிறுமியையும் போலீசார் 7 மாதங்களுக்கு பிறகு மீட்டனர். இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட வேல்முருகன் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.2¾ கோடி வெளிநாட்டு கைக்கெடிகாரங்கள் பறிமுதல்; வாலிபர் கைது
பாங்காங்கில் இருந்து கடத்தி வந்த ரூ.2¾ கோடி வெளிநாட்டு கைக்கெடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. கருவேல மரம் ஏலம் எடுக்க கொடுத்த ரூ.2 லட்சத்தை திருப்பி தர மறுத்தவரை காரில் கடத்திய 4 பேர் கைது
கருவேல மரம் ஏலம் எடுக்க கொடுத்த ரூ.2 லட்சத்தை திருப்பி தர மறுத்தவரை காரில் கடத்தி சென்ற திண்டுக்கல்லை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர் உடல் 10 நாட்களுக்கு பின்னர் மீட்பு
ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர் உடல் 10 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.
4. திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகைகளில் 11 கிலோ நகைகள் மீட்பு
திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகைகளில் 11 கிலோ நகைகள் இன்று மீட்கப்பட்டு உள்ளன.
5. கோவையில் ஆன்லைன் நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி பங்குதாரர் கைது; உரிமையாளர் தலைமறைவு
கோவையில் ஆன்லைன் நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பங்குதாரர் கைது செய்யப்பட்டார். நிறுவன உரிமையாளர் உள்பட பலர் தலைமறைவாக உள்ளனர். கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கூறியதாவது:-