திருவாரூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,368 வழக்குகளுக்கு தீர்வு
திருவாரூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,368 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திருவாரூர்,
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீர்வு செய்திட திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட நீதிபதி கலைமதி தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி பக்கிரிசாமி, தலைமை குற்றவியல் நீதிபதி விஜயகுமார், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான மோகனம்பாள், மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபாலகண்ணன், மூத்த வக்கீல்கள் சதாசிவம், ஜெயராமன், மணிகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமரசத்திற்குரிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவனாம்சம் உள்பட 4,550 வழக்குகள் நீதிபதிகள் முன்னிலையில் சமரச தீர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் விபத்து இழப்பீடு வழக்குகள், காசோலை வழக்குகள், சமரத்திற்குரிய குற்ற வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள் என மொத்தம் 2,368 வழக்குகள் தீர்வு செய்யப்பட்டன. இதில் ரூ.2 கோடியே 63 லட்சத்து 39 ஆயிரத்து 600 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

Related Tags :
Next Story