நாகையில் இருந்து புதுக்கோட்டைக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
நாகை பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல், விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
நாகப்பட்டினம்,
நாகை பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல், விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், நாகை, சன்னமங்கலம், திருப்பூண்டி, அருந்தவம்புலம், சாட்டியக்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையத்தில் இருப்பு வைக்கப்படுகிறது. இந்த நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அரவைக்காக வெளிமாவட்டங்களுக்கு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நாகையில் இருந்து புதுக்கோட்டைக்கு அரவைக்காக 1,000 டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி நாகை பகுதிகளில் உள்ள அரசு திறந்த வெளி சேமிப்பு மையங்களில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகளின் மூலம் நாகை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது.

Related Tags :
Next Story