வாளாமங்கலத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் கிராம மக்கள் அறிவிப்பு
வாளாமங்கலத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்துவது என்று கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
திருமருகல்,
திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சியில் வாளாமங்கலம் கிராமம் உள்ளது. நாகை-நன்னிலம் நெடுஞ்சாலையில் வாளாமங்கலம் பஸ் நிறுத்தத்திலிருந்து தெற்கே செல்லும் இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாக செல்ல முடியாமல் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
போராட்டம்
எனவே வாளாமங்கலத்தில் குண்டும், குழியுமான சாலையை விரைவில் சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் போராட்டம் நடத்துவது என்று கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story