மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் விடிய, விடிய மழைபண்ருட்டியில் 49 மி.மீ. பதிவானது + "||" + Dawn, dawn rain in the district 49 mm in Panruti. Recorded

மாவட்டத்தில் விடிய, விடிய மழைபண்ருட்டியில் 49 மி.மீ. பதிவானது

மாவட்டத்தில் விடிய, விடிய மழைபண்ருட்டியில் 49 மி.மீ. பதிவானது
கடலூர் மாவட்டத்தில் நேற்று விடிய விடிய மழைபெய்தது. இதில் அதிகபட்சமாக பண்ருட்டியில் 49 மி.மீ. மழை பெய்தது.
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. அதேப்போல் நேற்று முன்தினம் நள்ளிரவும் மழை பெய்தது. கடலூரில் நள்ளிரவில் பெய்யத்தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. காலையிலும் 8 மணி வரை மழை லேசாக தூறிக்கொண்டே இருந்தது.இதனால் நகரின் உள்பகுதியில் சாலையோரங்களிலும், சாலையில் உள்ள பள்ளங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையின் காரணமாக கடலூரில் நேற்று இதமான காலநிலை நிலவியது. இதேப்போல் பண்ருட்டி, வானமாதேவி, வடக்குத்து, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பரங்கிப்பேட்டை, வேப்பூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இதில் அதிகபட்சமாக பண்ருட்டியில் 49 மி.மீ. மழை பெய்தது. இதர பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- வானமாதேவி 38.4, கடலூர் கலெக்டர் அலுவலகம் 37, கடலூர் 27.6, வடக்குத்து 12, குடிதாங்கி 10, சிதம்பரம் 9.60, குறிஞ்சிப்பாடி 9, அண்ணாமலை நகர் 6.2, புவனகிரி 6, பரங்கிப்பேட்டை 6, கொத்தவாச்சேரி 5, வேப்பூர் 4

மாவட்டத்தில் சராசரியாக 8.79 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.