நாகர்கோவில் அருகே அமைச்சரை கண்டித்து இளைஞர் காங்கிரசார் திடீர் ஆர்ப்பாட்டம் 11 பேர் கைது


நாகர்கோவில் அருகே அமைச்சரை கண்டித்து இளைஞர் காங்கிரசார் திடீர் ஆர்ப்பாட்டம் 11 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2019 4:30 AM IST (Updated: 14 July 2019 8:25 PM IST)
t-max-icont-min-icon

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 6 அடியாக சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 2–வது வாரத்தில் தொடங்கியது. ஆனாலும் தற்போது வரை பெரிய அளவில் மழை பெய்யவில்லை. குமரி மாவட்டத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவ மழை தான் அதிகளவில் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு மழை போதிய அளவு பெய்யாததால் மழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே பாசனத்துக்காக கடந்த  28–ந் தேதி பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அன்று அணையின் நீர்மட்டம் 13.20 அடியாக இருந்தது. அதன் பிறகு பெருஞ்சாணி அணையும் திறக்கப்பட்டது. அணைகள் திறக்கப்பட்ட பிறகும் மழை பெய்யாததால் அணைகளின் நீர்மட்டம் மளமளவென குறைய தொடங்கியது. 

பேச்சிப்பாறை அணையில் நேற்று தண்ணீர் 6 அடியாக குறைந்தது. அதே சமயத்தில் அணைக்கு 319 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 676 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதே போல பெருஞ்சாணி அணைக்கு 226 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 280 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு இருக்கிறது. குமரி மாவட்டத்தில் நேற்று மலையோர பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழை பாலமோர் பகுதியில் 8 மில்லி மீட்டர் அளவுக்கு பெய்திருந்தது.

Next Story