2,981 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி


2,981 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி
x
தினத்தந்தி 15 July 2019 4:00 AM IST (Updated: 14 July 2019 10:23 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது.

பெரியபாளையம்,

பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ் ஆட்சி மொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு 2,981 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினர்.

விழாவில் பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன், ஆரணி கூட்டுறவு சங்க தலைவர் தயாளன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் பூபாலமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story