கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
இந்து கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி திருச்சி மாநகர் மாவட்ட அரியமங்கலம் மண்டல் சார்பில் தாராநல்லூர் கீரைக்கடை பஜார் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி,
இந்து கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி திருச்சி மாநகர் மாவட்ட அரியமங்கலம் மண்டல் சார்பில் தாராநல்லூர் கீரைக்கடை பஜார் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து முன்னணி அரியமங்கலம் மண்டல் பொதுச்செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். திருச்சி கோட்ட செயலாளர் ராமசிவகுமார், பா.ஜ.க. மாநில செயலாளர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மண்டல தலைவர் தமிழ்வேந்தன் உள்பட இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்து கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Related Tags :
Next Story