தூத்துக்குடியில், மொட்டை மாடியில் தூங்கியவர்களிடம் 5 பவுன் சங்கிலி, செல்போன் திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில், மொட்டை மாடியில் தூங்கியவர்களிடம் 5 பவுன் சங்கிலி, செல்போன் திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 14 July 2019 9:30 PM GMT (Updated: 14 July 2019 7:08 PM GMT)

தூத்துக்குடியில் மொட்டை மாடியில் தூங்கியவர்களிடம் தங்கசங்கிலி, செல்போனை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் மொட்டை மாடியில் தூங்கியவர்களிடம் தங்கசங்கிலி, செல்போனை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மொட்டை மாடி...

தூத்துக்குடி வி.எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் சுரேஷ். சொந்தமாக கார் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சகாயமொபினா(வயது 35). நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார்களாம். அப்போது சகாயமொபினா கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை அருகில் கழற்றி வைத்து இருந்தாராம். 2 செல்போனையும் அதன் அருகே வைத்து விட்டு தூங்கி உள்ளனர்.

திருட்டு

இந்த நிலையில் பக்கத்து வீட்டில் ஆள் இல்லாததால், அந்த வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் நுழைந்து உள்ளார். பின்னர் அங்கிருந்து சுரேசின் வீட்டு மொட்டை மாடிக்கு வந்து உள்ளார். அங்கு சுரேஷ் குடும்பத்துடன் தூங்கி கொண்டு இருப்பதை பார்த்த மர்ம நபர், நைசாக அவர்கள் வைத்து இருந்த தங்க சங்கிலி மற்றும் 2 செல்போனையும் திருடினாராம். தொடர்ந்து சகாய மொபினாவின் கொலுசை கழற்றுவதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. உடனடியாக விழித்துக் கொண்ட சகாயமொபினா சத்தம் போட்டு உள்ளார். இதனால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story