கோவில் சொத்துக்களை மீட்கக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணியினர் தூத்துக்குடி முத்தையாபுரம், சாத்தான்குளம், கோவில்பட்டி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்பிக்நகர்,
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணியினர் தூத்துக்குடி முத்தையாபுரம், சாத்தான்குளம், கோவில்பட்டி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முத்தையாபுரம்
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் இந்து முன்னணியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மண்டல செயலாளர் முத்துராஜா தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் பாலா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேலன், மாவட்ட பேச்சாளர் ஆறுமுகம், இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட செயலாளர் சண்முகபிரியா, நெல்லை கோட்ட இளைஞர் முன்னணி பொறுப்பாளர் ராகவேந்திரா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவலிங்கம், மண்டல செயலாளர் காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள கோவில் சொத்துகளுக்கு சரியாக வரி வசூலிக்க வேண்டும். அபகரிக்கப்பட்ட கோவில் சொத்துகளை மீட்க வேண்டும், கோவிலில் சாமி தரிசனத்துக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாதவன், மாவட்ட பார்வையாளர் சிவக்குமார், தெற்கு மண்டல தலைவர் சுரேஷ், பொதுச் செயலாளர் நம்பிராஜ், பொருளாளர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தான்குளம் பழைய பஸ்நிலையம் முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். முத்துசுந்தரம், சீத்தாராமன், சட்டமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சட்ட நிபுணர் நம்பிராஜன், பா.ஜனதா நகர தலைவர் ராஜ்மோகன், நகர தலைவர்கள் பால்பாண்டி, கேசவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
இதே போன்று கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு இந்து முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் கணேசன், ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story