உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு எதிரானது தி.மு.க. கண்டனம்
உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது என்று தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி,
நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டம் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் திருமால் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. தொகுதி செயலாளர் நடராஜன், மாநில மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சந்துரு, மாணவர் அணி அமைப்பாளர் சந்திரசேகர் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் நெசவாளர் அணி ரங்கநாதன், மாணவர் அணி துணை அமைப்பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
உதயநிதி ஸ்டாலினை இளைஞர் அணி செயலாளராக நியமித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, பிராந்திய இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்துவிட்டு அனைத்து பிராந்திய மாணவர்களுக்கும் கல்வியில் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கு எதிரானது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அநீதி இழைக்கக்கூடியது. எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட்டு நலிந்த பிரிவினரின் நலன்காக்க வேண்டும். நீட் தேர்வில் தமிழக, புதுச்சேரி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். இதுசம்பந்தமாக தமிழக, புதுச்சேரி அரசுகள் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து நீட் தேர்வுக்கான விலக்கினை பெற்றுத்தர முயல வேண்டும். மாணவர்கள், இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா நடமாட்டத்தை புதுவையில் அடியோடு தடுத்து நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story