வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்


வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்
x
தினத்தந்தி 15 July 2019 4:27 PM IST (Updated: 15 July 2019 4:27 PM IST)
t-max-icont-min-icon

மீன்வள பல்கலைக்கழகம்: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில், உதவி என்ஜினீயர், பண்ணை மேலாளர், ஸ்டெனோ உள்ளிட்ட பணியிடங்களுக்கு 38 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

 8-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ என்ஜினீயரிங், பட்டப்படிப்பு என பலதரப்பட்ட படிப்பினை படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு உள்ளது.

அந்தந்த பணிக்கான சரியான கல்வித் தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு 5-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://tnjfu.ac.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும்.

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்

சென்டிரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும், மத்திய அரசு நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர், அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர், சீப் மேனேஜர், சீனியர் மேனேஜர், சீனியர் டெக்னிக்கல் மேனேஜர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுநிலை பட்டப்படிப்புடன், டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இது பற்றிய விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசிநாள் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது 22-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.celindia.co.in. என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் கன்சல்டன்ட், ரிசர்ச் அசோசியேட் போன்ற பணியிடங்களுக்கு 42 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் புதுடெல்லியில் உள்ள, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முதுநிலை நிர்வாக அதிகாரி அலுவலகத்தை சென்றடைய வேண்டும். அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய அறிவிப்பு ஜூலை 5-ந்தேதி வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரங்களை www.cpcb.nic.in என்ற இணையதளத் தில் பார்க்கலாம்

கல்பாக்கம் அணுசக்தி மையம்

கல்பாக்கம் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் நியூக்ளியர் மறுசுழற்சி வாரியம், பிளாண்ட் ஆபரேட்டர், லேபரேட்டரி அசிஸ்டன்ட், பிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், ஏ.சி.மெக்கானிக் போன்ற பணிகளுக்கு 43 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐடிஐ. படித்தவர்கள், என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 22 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஆகஸ்டு 7-ந்தேதியாகும். இது பற்றிய விவரங்களை www.barc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.



Next Story