பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் சாதி சான்றிதழ் வழங்க கோரி கிராமமக்கள் மனு
கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் அரசுக்கு மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து தங்களுக்கு சாதிசான்றிதழ் வழங்க கோரி அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் பாண்டறவேடு, காவராஜப்பேட்டை, கீளப்பூடி, பெருமாநெல்லூர், மேலப்பூடி, மோட்டூர், சொரக்காயப்பேட்டை, ராமச்சந்திராபுரம், படுதலம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொண்டாரெட்டி இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் 800 பேர் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும்படி கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் அரசுக்கு மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து தங்களுக்கு சாதிசான்றிதழ் வழங்க கோரி அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தால், கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகம் வந்தனர்.
அப்போது, தாசில்தாரை சந்தித்து தங்களுக்கு சாதிசான்றிதழ் வழங்கும்படி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Tags :
Next Story