மதவாத சக்தியை முறியடிக்க ராகுல்காந்திக்கு உறுதுணையாக இருப்போம் நாராயணசாமி ஆவேச பேச்சு
நாட்டை துண்டாட நினைக்கிற மதவாத சக்தியை முறியடிக்க நாம் ராகுல்காந்திக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நாராயணசாமி ஆவேசமாக கூறினார்.
புதுச்சேரி,
காமராஜரின் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது உழைப்பினால் உயர்ந்தவர் காமராஜர். அவர் தனது திறமையான ஆட்சியினால் அகில இந்திய அளவில் உயர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆனார். கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர் அவர். தமிழகம்-புதுவை மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பேசப்படுபவர் காமராஜர்.
இப்போதும் காங்கிரசார் காமராஜர் ஆட்சியை கொண்டுவருவோம் என்பதற்கு காரணம் அவரது நிர்வாக திறமைதான். அணைகள், மின் உற்பத்தி நிலையங்கள், குக்கிராமங்களில்கூட பள்ளிகள், கொண்டுவந்தது அவர்தான். திருச்சியில் பெல் நிறுவனம், சேலம் இரும்பு உருக்காலை எல்லாம் அவரது ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. வெங்கட்ராமன், சி.சுப்ரமணியம், கக்கன் போன்ற தலைவர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தனர்.
அவரது ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் 2-வது இடத்தில் இருந்தது. கல்வியில் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் காமராஜர். தனது பிறந்தநாளை ரூ.3 லட்சம் செலவு செய்து கொண்டாட இருந்தவர்களிடம் 2 பள்ளிக்கூடங்களை கட்டி கொடுங்கள் என்றவர் காமராஜர். குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிக்க வசதியாக மதிய உணவும் வழங்கியவர் அவர்தான்.
இப்போது சிலர் தனது பிறந்தநாளையொட்டி இந்திராநகர் முதல் காமராஜர் சிலை வரை கட்-அவுட் வைக்கிறார்கள். அவர்தான் சின்ன காமராஜர் என்கிறார். இப்போது அரசியல் வியாபாரம் ஆகிவிட்டது. அரசியலுக்கு வந்து சம்பாதிக்க நினைக்கிறார்கள்.
வேட்டி கட்டிய 2 தமிழர்களுக்கு பெருமை உண்டு. ஒன்று காமராஜர். நேருவுக்கு பின்னர் லால்பகதூர் சாஸ்திரியையும், அதன்பின் இந்திராகாந்தியையும் பிரதமராக்கிய பெருமை அவருக்கு உண்டு. அதேபோல் ராஜீவ்காந்தியை பிரதமராக்கிய பெருமை மூப்பனாருக்கும் உண்டு. இப்போது நாம் பதவியில் இருப்போம். நாளை இருக்காது. எனவே எப்போதும் சேவையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
காங்கிரஸ் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரை 5 மாநில முதல்-அமைச்சர்கள் சந்தித்து மீண்டும் பொறுப்பினை ஏற்க கூறினோம். ஆனால் அவர் பதவியை ஏற்க மறுத்துவிட்டு காங்கிரசுக்காக 24 மணிநேரமும் உழைக்க தயார் என்றார். தேர்தல் தோல்விக்கு எல்லோரும்தான் பொறுப்பு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாட்டை துண்டாட நினைக்கிறது. அந்த மதவாத சக்தியை முறியடிக்க வேண்டும் என்றார். அவருக்கு நாம் உறுதுணையாக இருப்போம். வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்து பாரதீய ஜனதா வெற்றிபெற்றுள்ளது.
இந்திராகாந்தி தேர்தலில் தோல்வி அடைந்தபோது அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு இருந்தது. அதேபோல் ராஜீவ்காந்தி, சோனியாகாந்திக்கும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் ராகுல்காந்திக்கு எதிர்ப்பு இல்லை. ராஜினாமா முடிவினை வாபஸ்பெற வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தியபோது யோசிக்கிறேன் என்றார். ஆனால் அவர்தன் முடிவினை மாற்றவில்லை.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

Related Tags :
Next Story