கடனை திருப்பித் தராததால் கியாஸ் ஏஜென்சி மேலாளர் கடத்தல் மகனுடன் ரியல் எஸ்டேட் அதிபர் கைது
செங்குன்றத்தில் வாங்கிய கடனை திருப்பி தராததால் கியாஸ் ஏஜென்சியின் மேலாளரை காரில் கடத்திய ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் அவரது மகன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகர் எம்.ஜி.ஆர்.தெருவைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (வயது 47). இவர் ஈரோடு மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள கியாஸ் ஏஜென்சி நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி சுதா (40). இவர் எம்.ஏ. நகரில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சுதா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பாலகணேசன் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாலமுருகன்(44) என்பவருடைய மனைவி மீனா என்பவரிடம் ரூ.5 லட்சம் பணத்தை கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து சுதா வழங்கிய பணத்தை வெகுநாட்கள் ஆகியும் திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு சுதாவின் கணவர் வாஞ்சிநாதன் உடுமலைப்பேட்டையில் இருந்து ஒரு இரங்கல் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு செங்குன்றம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது மீனாவின் மகன் சஞ்சய் குமார் (20), தங்கை மகன் பாலமுருகன் (21) உள்ளிட்ட 7 பேர் கார் ஒன்றில் வாஞ்சிநாதனை கடத்தி சென்றனர். பின்னர், புழல் அடுத்த காவாங்கரை அருகே அவரை அடித்து துன்புறுத்தி வெற்றுத்தாளில் ரூ.40 லட்சம் தரவேண்டும் என எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த ரூ.40 லட்சத்தை 12-ந் தேதிக்குள் கொடுக்கவில்லை என்றால் வாஞ்சிநாதனை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், வாஞ்சிநாதன் அவர்களிடமிருந்து தப்பி வந்து செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதுகுறித்து செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து வாஞ்சிநாதனை கடத்தியதாக மீனாவின் கணவர் பாலமுருகன், அவரது மகன் சஞ்சய்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும், மீனாவின் தங்கை மகன் பாலமுருகன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பணத்துக்காக வாலிபரை கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story