மாவட்ட செய்திகள்

முத்துப்பேட்டையில் மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்ததால் பரபரப்பு போலீஸ் குவிப்பு + "||" + Due to the distribution of beef biryani in Muttapettai, the police is concentrated

முத்துப்பேட்டையில் மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்ததால் பரபரப்பு போலீஸ் குவிப்பு

முத்துப்பேட்டையில் மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்ததால் பரபரப்பு போலீஸ் குவிப்பு
முத்துப்பேட்டையில் மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
முத்துப்பேட்டை,

நாகை மாவட்டம் பொரவச்சேரி பகுதியை சேர்ந்த முகமதுபைசன் என்பவர், மாட்டுக்கறி சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பதை வலியுறுத்தும் வகையில் மாட்டுக்கறி சூப் சாப்பிடுவதுபோன்ற வீடியோவை முகநூலில் பதிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் அவரை தாக்கி உள்ளனர்.


இந்த நிலையில் முகமதுபைசன் மீதான தாக்குதலை கண்டித்தும், மாட்டுக்கறி சாப்பிடுவது நல்லது என்பதை வலியுறுத்தியும் முத்துப்பேட்டையில் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்யப்படும் என அறிவித்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் முத்துப்பேட்டை-பட்டுக்கோட்டை சாலை பகுதியில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்தனர்.

இதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்யப்பட்டதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆம்புலன்ஸ் மீது கல்வீச்சு-போலீஸ் தடியடி
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் தேர்தல் அலுவலர் மயக்கம் அடைந்ததால் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு ஆம்புலன்ஸ் மீது கல்வீசினர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
2. ஊரக உள்ளாட்சி தேர்தல்: கரூர் உள்பட 8 ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்யும் பொருட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கரூர் மாவட்டத்தில் கரூர் உள்பட 8 ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக் கை நடந்தது.
3. ஊரக உள்ளாட்சி தேர்தல்: 20 மையங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
சேலம் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி 20 வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
4. பேராவூரணியில் வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
பேராவூரணியில் வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
5. புத்தாண்டு பண்டிகையையொட்டி நாகை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
நாகை மாவட்டத்தில், புத்தாண்டு பண்டிகையையொட்டி பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.