நல்லம்பள்ளி, காரிமங்கலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நல்லம்பள்ளியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நல்லம்பள்ளி,
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நல்லம்பள்ளியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிர்வாகி மங்கையர்கரசி தலைமை தாங்கினார். கமலநாயகி, மலர், சுமதி, ஜெபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் ராஜாம்பாள், ஒன்றிய செயலாளர் ஜெயந்தி, சி.ஐ.டி.யு. மாவட்ட இணை செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் ரேவதி நன்றி கூறினார். இதே போல் காரிமங்கலம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் துர்காதேவி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் அஞ்சலி தேவி, ரீதா, சரஸ்வதி, நாகம்மாள், மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட பொருளாளர் ஈஸ்வரி, ஒன்றிய தலைவர் நந்தினி, மாவட்ட துணைச் செயலாளர் கவிதா மற்றும் சி.ஐ.டி.யு, தர்மபுரி மாவட்ட துணைத்தலைவர் கலாவதி ஆகியோர் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து பேசினர்.

Related Tags :
Next Story