சந்திர கிரகணத்தையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு சிறப்பு பரிகார பூஜை


சந்திர கிரகணத்தையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு சிறப்பு பரிகார பூஜை
x
தினத்தந்தி 17 July 2019 10:30 PM GMT (Updated: 17 July 2019 3:04 PM GMT)

சந்திர கிரகணத்தையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பரிகார பூஜை நடத்தப்பட்டது.

கன்னியாகுமரி,

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இந்தநிலையில் சந்திரகிரகணத்தையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் நடை நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணிக்கு அடைக்கப்பட்டது. அப்போது, அம்மன் சிலை மற்றும் சாமி சிலைகள் அனைத்தும் தர்ப்பை புல், பட்டு புடவையால் மூடப்பட்டது.

பின்னர் சந்திர கிரகணம் முடிந்ததை தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது, அம்மனுக்கு சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் கன்னியாகுமரியில் உள்ள வெங்கடாசலபதி கோவிலும் சந்திர கிரகணத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின்னர், நேற்று காலை புண்ணிய வாசகம் எனப்படும் பரிகார பூஜைக்காக காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பரிகார பூஜைகள் நடைபெற்ற பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Next Story