சுயநலத்துக்காக கட்சியை விட்டு பிரிந்து செல்பவர்களை தடுக்க முடியாது தஞ்சையில், டி.டி.வி.தினகரன் பேட்டி


சுயநலத்துக்காக கட்சியை விட்டு பிரிந்து செல்பவர்களை தடுக்க முடியாது தஞ்சையில், டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 18 July 2019 4:45 AM IST (Updated: 18 July 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

சுயநலத்துக்காக கட்சியை விட்டு பிரிந்து செல்பவர்களை தடுக்க முடியாது என்று தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

தஞ்சாவூர்,

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால் ஜெயலலிதா ஆட்சி என்று கூறி நடைபெறும் இந்த ஆட்சியில் விவசாயிகள் மட்டும் அல்ல, அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நல்ல தீர்வு தேர்தல் தான்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாங்கள் போட்டியிடவில்லை. எங்கள் கட்சியை பதிவு செய்து கொண்டிருக்கிறோம். பதிவு முடிந்த பிறகு தேர்தலை சந்திப்போம். சொந்த காரணத்துக்காக, சுய நலத்துக்காக எங்களை விட்டு பிரிந்து சென்றவர்களை தடுக்க முடியாது. உண்மையான தொண்டர்கள், நிர்வாகிகள் எங்களோடு தான் உள்ளனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மிகப்பெரிய சக்தியாக வரும் காலத்தில் நிரூபிப்போம். கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள் மீது கட்சி நடவடிக்கை என்பது தொடர்ந்து கொண்டுள்ளது. அதை தொடர்ந்து செய்வோம். சசிகலாவை வெளியில் எடுக்க சட்டரீதியாக முயற்சி செய்து வருகிறோம். நிச்சயம் அவர் வெளியே வருவார்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங் களை தமிழக அரசு அனுமதிக்கமாட்டோம் என கூறி உள்ளது. இதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியவர்கள் அனுமதித்து விட்டார்கள். தேர்தல் வரும் போது தமிழக மக்கள் உரிய பதிலை அளிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story