மாவட்ட செய்திகள்

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்குகிறது டி.ஐ.ஜி. லோகநாதன் தகவல் + "||" + Security rehearsal begins today Loganathan Information

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்குகிறது டி.ஐ.ஜி. லோகநாதன் தகவல்

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்குகிறது டி.ஐ.ஜி. லோகநாதன் தகவல்
தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது என டி.ஐ.ஜி. லோகநாதன் கூறினார்.
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கான காத்திருப்பு அறையை தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது:-

புதிய போலீஸ் நிலையம்

கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கும்பகோணம் உட்கோட்டத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறை சென்று திரும்பியவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

திருவிடைமருதூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட திருப்பனந்தாள் போலீஸ் நிலைய சரகத்தில் உள்ள சோழபுரத்தில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு ஒத்திகை

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை இன்று(வியாழக்கிழமை) தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கும்ப கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நிகர லாபத்தை உயர்த்திட வேளாண்மை எந்திரமயமாக்கும் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் கலெக்டர் தகவல்
நிகர லாபத்தை உயர்த்திட வேளாண்மையை எந்திரமயமாக்கும் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
2. தீவன சோளம்-தட்டைப்பயிறு உற்பத்தி செய்ய 100 சதவீத மானியத்தில் விதைகள் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
தீவன சோளம் மற்றும் தட்டைப்பயிறு உற்பத்தி செய்ய 100 சதவீத மானியத்தில் விதைகள் வழங்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
3. கிசான் மன்தான் யோஜனா திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கலெக்டர் தகவல்
கிசான் மன்தான் யோஜனா திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
4. ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் கலெக்டர் தகவல்
ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.
5. சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.303½ கோடி வருவாய் மேலாளர் தகவல்
சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு நடப்பாண்டில் இதுவரை ரூ.303½ கோடி வருவாய் கிடைத்துள்ளது என மேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.