சிங்கபெருமாள் கோவிலில் வீட்டின் பூட்டை உடைத்து 34½ பவுன் நகை திருட்டு


சிங்கபெருமாள் கோவிலில் வீட்டின் பூட்டை உடைத்து 34½ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 18 July 2019 3:45 AM IST (Updated: 18 July 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

சிங்கபெருமாள் கோவிலில் வீட்டின் பூட்டை உடைத்து 34½ பவுன் நகை திருடப்பட்டது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோவிலில் வி.ஐ.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 64). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 34½ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசில் சுப்பிரமணி புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story