மாவட்டம் முழுவதும் 1½ மாதத்தில், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 25 பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
மாவட்டம் முழுவதும் கடந்த 1½ மாதத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-
தேனி,
மாவட்டம் முழுவதும் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தீவிர ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். திருட்டு சம்பவங்கள் நடந்தால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதியில் இருந்து கடந்த 15-ந்தேதி வரையிலான 1½ மாத கால கட்டத்தில் மாவட்டம் முழுவதும் 25 திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், 20 வழக்குகளில் திருடர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில், மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 27 பவுன் நகைகள், 9 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் கைப்பற்றப்பட்டு உள்ளன. திருடர்களை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகள், போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இரவு ரோந்து பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு திருட்டு சம்பவங்கள் குறைந்து உள்ளன.
Related Tags :
Next Story