மணவாளக்குறிச்சி அருகே ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் நகை திருடிய வேலைக்காரர் கைது


மணவாளக்குறிச்சி அருகே ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் நகை திருடிய வேலைக்காரர் கைது
x
தினத்தந்தி 19 July 2019 3:45 AM IST (Updated: 18 July 2019 9:02 PM IST)
t-max-icont-min-icon

மணவாளக்குறிச்சி அருகே ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் நகை திருடிய வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே கோவில்விளாகம் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா கமால். அந்த பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டில் அலமாரியில் வைத்திருந்த 1 பவுன் எடையுள்ள 2 மோதிரங்கள் மாயமாயின. அவற்றை முஸ்தபா கமால் வீடு முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார், முஸ்தபா கமால் வீட்டில் வேலை செய்து வந்த சரல் பகுதியை சேர்ந்த நெல்சன் (வயது30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டை சுத்தம் செய்த போது, அலமாரியில் இருந்த தங்க மோதிரங்களை திருடியதாக நெல்சன் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து நெல்சனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்தனர். ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் நகை திருடிய வேலைக்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story