சூனாம்பேடு அருகே தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


சூனாம்பேடு அருகே தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 19 July 2019 3:15 AM IST (Updated: 18 July 2019 9:56 PM IST)
t-max-icont-min-icon

தனியார் ரசாயன தொழிற்சாலை பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதால் தொழிலாளர்கள் பலமுறை சாலைமறியல், தொடர் உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு அடுத்த வில்லிவாக்கத்தில் தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதாக கூறி தொழிலாளர்கள் பலமுறை சாலைமறியல், தொடர் உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஊழியர்களுக்கு ஒருநாள் சம்பளமாக ரூ.380 வழங்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த சம்பளத்தை தனியார் நிறுவனம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பினனர் அவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.

Next Story