மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி 200-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்பு + "||" + More than 200 players participated in the Perambalur District-wide Taekwondo Tournament

பெரம்பலூர் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி 200-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்பு

பெரம்பலூர் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி 200-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்பு
பெரம்பலூர் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட டேக்வாண்டோ விளையாட்டு சங்கத்தின் சார்பில் 2-வது ஆண்டு மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நேற்று எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் தலைவர் அரவிந்தன் தலைமை தாங்கினார். பொருளாளர் ரவி வரவேற்றார். டேக்வாண்டோ போட்டியினை டாக்டர் கிருபாகரன் தொடங்கி வைத்தார். டேக்வாண்டோ போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன. இதில் 11 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சப்-ஜூனியர் பிரிவிலும், 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கேடட் பிரிவிலும், 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஜூனியர் பிரிவிலும், 17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சீனியர் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கு 8 பிரிவுகளில் டேக்வாண்டோ போட்டிகள் நடந்தன. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 200-க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.


மாநில அளவில்

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கமும், சான்றிதழும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளிப்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூர் டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன், பெரம்பலூர் மாவட்ட டேக்வாண்டோ விளையாட்டு சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான முதல், இரண்டு இடங்களை பிடித்த வீரர்- வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியின் ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளுக்கு முதன்முறையாக பெரம்பலூரில் வருகிற ஆகஸ்டு மாதம் 9, 10, 11-ந் தேதிகளில் நடைபெறவுள்ளன. சப்-ஜூனியர், கேடட் ஆகிய பிரிவுகளுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 26, 27, 28-ந் தேதிகளில் தர்மபுரியில் நடக்கிறது. மாநில அளவில் முதல் இடம் பிடிப்பவர்கள் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதி தேர்வில் கலந்து கொள்வார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
2. தஞ்சையில் மாநில அளவிலான கராத்தே போட்டி 800 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு
தஞ்சையில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் 800 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
3. மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி: சாம்பியன் பட்டத்தை குமரி அணி வென்றது
மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை குமரி அணி வென்று கோப்பையை தட்டி சென்றது.
4. 2023-ம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டி - ஒடிசாவில் நடைபெறும்
2023-ம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது.
5. ஜார்கண்ட் தேர்தலில் போட்டியிட முன்னாள் முதல்-மந்திரிக்கு அனுமதி மறுப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஜார்கண்ட் தேர்தலில் போட்டியிட முன்னாள் முதல்-மந்திரிக்கு அனுமதி மறுப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.